Politics

தி.மு.க. முப்பெரும் விழா 2026.. விருது பெறுவோர் பட்டியலை அறிவித்த தலைமைக் கழகம் : முழு விவரம் அறிக!

தி.மு.க. சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தி.மு.கழகம் தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளான (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும். மேலும், இவ்விழாவின் போது முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் விருது உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அதன்படி,

பெரியார் விருது

கழக விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா விருது

சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் விருது

கழக துணைப் பொதுச்செயலாளரும், தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாவேந்தர் விருது

கழக மருத்துவர் அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என்.சோமு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் விருது

கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் விருது

கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் நா.இளையராஜா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முரசொலி செல்வம் விருது

முரசொலி அறக்கட்டளை சார்பில் ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ப.திருமாவேலன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “காமராஜருக்கு உரிய மரியாதை செய்தவர் கலைஞர்.. வரலாறு தெரியுமா?” : காங்கிரசுக்கு தங்கம் தென்னரசு பதிலடி!