Politics
“மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆக.28, 2018 அன்று பொறுப்பேற்று இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகாலமாக கழகத்தின் அனைத்து படிநிலைகளிலும் பணியாற்றி, ‘என்றும் மக்கள் பணி’ என்ற செயல் கொள்கையுடன் தேசிய அளவில் மாபெரும் தலைவராக ஓய்வில்லாமல் செயலாற்றி வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இவ்வேளையில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளை 110 மாவட்டக் கழகங்களாக பகுத்து, தி.மு.க என்னும் பவள விழா கண்ட பேரியத்தை மறுசீரமைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு,
“2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!”
Also Read
-
135 கிலோ போதைப் பொருள் : அன்று தவெக அமைச்சரை விஜய் காப்பற்றியதன் விளைவு, இன்று.. - கனிமொழி MP தாக்கு!
-
மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தல்!
-
“இணையத்தை குழந்தைகள் பயன்படுத்துவது அடிப்படை உரிமை” : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
கானா பாடலின் முகவரி.. பட்டி தொட்டி எங்கும் ஒலித்த தேவா ஹிட்ஸ்.. காற்றில் கலந்தார் ‘தேனிசைத் தென்றல்’!
-
“வெள்ளை மனம் கொண்ட தேவா.. கானா என்றாலே தேவா தான்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்!