Politics
“எனதருமை மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள ஓணத்திருநாள் வாழ்த்துச் செய்தியில், கேரள மக்களின் அறுவடைத் திருநாளாகவும் பண்பாட்டுப் பெருவிழாவாகவும் ஓணம் கொண்டாடப்படுகிறது. கேரளம் மட்டுமில்லாமல், பூமிப்பந்தில் மலையாளிகள் வாழும் பகுதிகளில் எல்லாம் எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய விழாவாக ஓணம் திகழ்கிறது.
சூழ்ச்சிகளாலும் புனையப்பட்ட கதைகளாலும் மாவேலி மன்னனை மறக்கடிக்க நினைத்ததை முறியடித்து, ஆண்டுதோறும் அத்திராவிட அரசனை மக்கள் நினைவுகூரும் விழாவாக ஓணம் திகழ்கிறது. அறுசுவை உணவும் அழகிய புத்தாடைகளும் அத்தப்பூக்கோலமும் கலைநிகழ்ச்சிகளும் நிறைந்த வண்ணமயமான திருவிழாவாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் வாழும் மலையாளச் சகோதரர்களும் இவ்விழாவை இனிதே கொண்டாட வேண்டுமென்ற பரந்த நோக்கத்தோடு, கேரள எல்லையோர மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்காக விடுமுறை அளித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். கடந்த திராவிட மாடல் அரசிலும் இருமாநில உறவை வலுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசுடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை நானும் மேற்கொண்டேன். தோள்சீலைப் போராட்ட வெற்றியின் 200-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தோழர் பினராயி விஜயன் அவர்கள் தமிழ்நாடு வந்தார். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவுக்காக நான் கேரளம் சென்றேன்.
அந்த வகையில், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் முன்னிறுத்தும் அழகிய நல்லிணக்கப் பெருவிழாவாக ஓணத்தைக் கொண்டாடி மகிழும் எனதருமை மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
-
“மீலாதுன் நபியைக் கொண்டாடிடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை: தொடர் சித்திரவதை.. முறிந்த விலா எழும்பு.. Post Mortem அறிக்கை சொல்வது?
-
இது சமூக அநீதி இல்லையா? மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்தால் நட்டம் வந்துவிடுமா?: தவெக அரசுக்கு தீபக் கேள்வி
-
“பத்திரிக்கைகளைப் பற்றி இப்படிப் பேசக் கூடாது” : பேரவையில் தவெக அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க!