Politics
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
தவெக அரசு சார்பாக நேற்று (ஆக.13) நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பொதுமக்கள், தொழில் முதலீட்டாளர்கள் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
குறிப்பாக கடந்த திராவிட மாடல் அரசில் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு தற்போது புதிய அரசு கொண்டு வந்தது போல கையெழுத்திடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதல் தேசிய ஊடகங்கள் எதற்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவே மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இது முதலீட்டாளார்கள் மாநாடு. ஆனால், இவ்வளவு ரகசியகமாக நடத்த வேண்டிய காரணம் என்ன? என சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதங்கள் எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பொறுப்பும் தவெக அரசுக்கும், தொழில்துறை அமைச்சருக்கும் உள்ளது. ஆனால், அது நடக்குமா என்பது கேள்விக்குறிதான்.
இந்நிலையில்தான், தவெக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் கூட்டம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள் எழுப்பிய கேள்விகள்.
75% MoU கள் திமுக ஆட்சியில் தயார் செய்தவை
இந்த 100 நாட்கள்ல பெரிய புதிய திட்டங்கள் ஏன் வரவில்லை?
வளர்ச்சிக்கு முக்கியமான பரந்தூர், ஒசூர் விமான நிலையங்கள் அமைப்பதில் இந்த அரசின் முடிவு என்ன.?
நம்பர் 1 :
இந்த Conclave விற்கு ஊடகங்களை ஏன் அனுமதிக்கவில்லை.? ஏன் இவ்வளவு Secrecy? ஏன், இதுல வர திட்டங்கள் எல்லாமே சென்ற திராவிட மாடல் ஆட்சில நாங்க ரெடி பண்ணினது தான் என்பது ஊடகங்களுக்கு தெரிஞ்சிடும் என்ற எண்ணமா.? எதுவாக இருந்தாலும் முதலீடுகளை ஈர்க்கவும் அதை Promotion செய்யவும் Press மிக முக்கியமான ஒன்று.
நம்பர் 2:
இதுல வந்த MOU-ஸ் களில் கிட்டத்தட்ட ஒரு 75% திராவிட மாடல் ஆட்சில ரெடி பண்ணி வச்சிருந்த அந்த திட்டங்கள்தான் அப்படின்னு எல்லாருக்கும் தெரியுது. அது உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.
நம்பர் 3:
நம்ம "Bullish on TN" லோகோவே மாத்திருக்கீங்கன்னு சொல்றாங்க. எல்லாத்துலயும் ஸ்டிக்கர் ஒட்ட தேவையில்ல. இதெல்லாம் வந்து நாங்க மார்க்கெட் பண்ணி, இவ்ளோ தூரம் Project செய்து, Publicity கொண்டுவந்து வச்சிருக்கோம் . அத நம்ம அப்படியே தொடர்ச்சியா நம்ம தமிழ்நாட்டுக்கு யூஸ் பண்றதுல என்ன தவறுன்னு எனக்கு தெரியல.
அதுல ஒன்னும் திமுக பிராண்டிங்எல்லாம் ஒன்றும் நாங்க ஒட்டல. அது தமிழ்நாட்டுக்கான பிராண்டிங். அந்த தமிழ்நாட்டோட பிராண்டிங்க திருப்பி ரீபிராண்ட் (Re-brand) பண்ணி, திருப்பி ரீ-ஸ்டார்ட் (Re-start) பண்ண வைக்காதீங்க. இத்தனை நாள் செய்திருக்கும் அந்த பணிய யூட்டிலைஸ் (Utilize) பண்ணிக்கோங்க. அது அடுத்த கட்டத்துக்கு தமிழ்நாட்ட உயர்த்துறதுக்கு உதவியா இருக்கும்.
நம்பர் 4:
ஆந்திர பிரதேஷ் CM சந்திரபாபு நாயுடு அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு State Investment Promotion Bureau மீட்டிங்க அவரே நடத்தினார். அதுல ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை கிளியர் பண்றாரு.
ஆனா இங்க இன்னும் சென்ற திமுக ஆட்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தப்பட்டு முடிக்கப்பட்ட அந்த திட்டங்களோட MOU-ஸ் மட்டும்தான் இன்னைக்கு நீங்க சைன் பண்றீங்க. அதுதான் Predominantly சைன் பண்றீங்க அப்படின்னு சொல்றாங்க. கிட்டத்தட்ட 75% of those MOUs signed today are from... or an outcome of the DMK regime's good work அப்படின்னு சொல்றாங்களே...
அப்போ புதிய திட்டங்கள் ஏன் வரல? இந்த 100 நாட்கள்ல ஏன் பெரிய புதிய திட்டங்கள் இன்னும் வரல?
நம்பர் 5:
ரொம்ப முக்கியமான ஒன்று Infrastructure. இவ்வளோ திட்டங்களும் இங்க வரணும், இன்னும் பெரிய திட்டங்கள்லாம் இங்க வரணும்னா, இன்வெஸ்ட்மென்ட் ரேஸ்ல நமக்கு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ரொம்ப ரொம்ப முக்கியம். ஓசூர் அண்ட் பரந்தூர் ஏர்போர்ட்ஸ் very very critical for Tamil Nadu's industrial growth. இதுல இன்றைய ஆட்சியாளருக்கு என்ன ஸ்டாண்ட் (Stand)ன்றது கிளாரிட்டி இன்னும் வரல.
எனவே, திராவிட நாயகன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி காலத்துல தமிழ்நாடு பெற்றிருந்த அந்த வளர்ச்சி தொடர வேண்டுமென்றால், Investment promotion நாம இன்னும் கவனம் செலுத்தணும். நிச்சயமாக மிகப்பெரிய அளவுல புதிய நிறுவனங்கள், புதிய வெளிநாட்டு முதலீடுகள் நம்ம தமிழ்நாட்டுக்கு புதிய இடங்களில் வருவதை நாம் உறுதி செய்வது மிக மிக அவசியம். தற்போதைய முதலமைச்சர் இதுல நிச்சயமாக கவனம் செலுத்தணும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!
-
“சொத்துவரி உயர்வு.. சென்னை மக்கள் தலையில் பேரிடி” : முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!
-
எல்லோருக்கும் சாரி.. : ஆன்லைன் லோன் ஆப் - 24 வயது இளைஞருக்கு நேர்ந்த துயரம்!
-
“தமிழும் தெரியவில்லை ; பொது நாகரிகமும் தெரியவில்லை” : மரியவில்சன் பேச்சுக்கு முரசொலி கடும் தாக்கு!
-
தொகுதி மறுவரையறை மசோதா : “ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவரக்கூடும்...” - பேரவையில் உதயநிதியின் முழு பேச்சு!