Politics
“நான் ஊட்டி வளர்த்த திமுக இளைஞர் அணி.. 47ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!” : மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
மதுரை மாவட்டத்தில் உள்ள ஜான்சிராணி பூங்காவில், 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி, தி.மு.க இளைஞர் அணி என்கிற சார்பு அணியை முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்தார்.
இதற்கு முதல் செயலாளராக பொறுப்பேற்று சுமார் 20 ஆண்டுகள், இளைஞர் அணியைக் கட்டி எழுப்பிய பெருமை, இன்றைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு.
அத்தகு சிறப்பு வாய்ந்த இளைஞர் அணியை, தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விளங்கும் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று, இளைஞர்களை வழிநடத்திச் செல்கிறார்.
இந்நிலையில், கழக இளைஞர் அணி இன்று (ஜூலை 20) 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,
“பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த தி.மு.க இளைஞர் அணி, 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!”
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!