Politics

தவெக ஆட்சியின் 60 நாட்களில் பதிவான 6 காவல்துறை தொடர்பான உயிரிழப்புகள்! : பட்டியலிட்ட திமுக!

கடந்த இரண்டு மாதங்களில் தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் பதிவான காவல்துறை மற்றும் சிறைக் காவல் தொடர்பான உயிரிழப்புகளை பட்டியலிட்டு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அப்பட்டியல் பின்வருமாறு,

1. எஸ். சபரி வர்மன் (35) — 13 ஜூலை 2026 | நாகர்கோவில், கன்னியாகுமரி

- புகையிலை பொருட்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளியான சபரி வர்மன், சிறைக் காவலில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

2. பாலாஜி (45) — 15 ஜூலை 2026 | புழல், சென்னை

- குட்கா வழக்கில் ஜூலை 12 அன்று சேலையூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாலாஜி, நீதிமன்றக் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

3. ரோஷன் (17) — 12 ஜூலை 2026 | ஓசூர், கிருஷ்ணகிரி

- ஓசூர் SIPCOT காவல்துறையினர் விசாரணை நடத்தி, செல்போனை திருப்பித் தர லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் சம்பவத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில், 17 வயது சிறுவன் ரோஷன் தற்கொலை செய்து கொண்டார்.

4. வெங்கடேசன் — 9 ஜூன் 2026 | சென்னை

- சென்னை ஓ.எம்.ஆர். காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வெங்கடேசன், விசாரணைக்குப் பின்னர் சந்தேகத்திற்கிடமான சூழலில் உயிரிழந்தார்.

5. ஸ்ரீராம் (22) — 31 மே 2026 | திருச்சி

- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காவல்துறையினரால் தாக்கப்பட்டு, தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தால் மனவேதனை அடைந்த ஸ்ரீராம், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

6. அந்தோணி ராஜ் (65) — 24 மே 2026 | தென்காசி

- தென்காசி அருகே சிவகிரி காவல் நிலையத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்தோணி ராஜ், தற்கொலை செய்து கொண்டார்.

Also Read: “காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றம்!” : உதயநிதி ஸ்டாலின்!