Politics
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முழுவதிலும், அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாணவரணியினர் உள்ளிட்ட திமுக-வினர் கடுமையான போராட்டங்களை இன்று (ஜூன் 29) முன்னெடுத்தனர்.
இந்த போராட்டங்களை திமுக அறிவித்ததும் பீதியில் இருந்த தவெக அரசு, தனது காவல்துறையை ஏவி இன்று காலை முதலே கைது நடவடிக்கையை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
தொடர்ந்து தவெக அரசுக்கு எதிராகவும் அவர்களின் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தால் அவர்களை ஒடுக்க நினைக்கிறது என்பதே நடந்து வருகிறது.
குறிப்பாக, சட்டப்பேரவையில் தவெக அரசின் அத்துமீறல்கள் குறித்து கேள்வியெழுப்பிய திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி சோதனை செய்வது, எம்.எல்.ஏ சிவசங்கர் மீது விசாரணை என்ற பெயரில் அவதூறு பரப்புவது போன்ற பாசிச போக்கையும் முழு நேர வேலையாக செய்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்! என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
-
“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!
-
விலைவாசி உயர்வால் விழி பிதுங்கும் மக்கள்.. ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதுமா? : விளாசிய மு.க.ஸ்டாலின்!
-
இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?
-
தாராபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.. மிரட்டிய ரோடு ஷோ.. ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!