Politics
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
தமிழ்நாட்டில் தற்போது புதிதாக அமைந்துள்ள தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன், வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிகையைத்தான் வெளியிட்டுள்ளார். அதிகாரிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் திணறியதை மக்கள் கண்டார்கள்.
இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும்,
“ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல!
எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
“41 பேர் உயிரி*ந்தபோது ‘மனசாட்சி’ இல்லாமல் ஓடிச்சென்ற நாள் இன்று!” : மதுராந்தகத்தில் உதயநிதி பேச்சு!
-
அரசாணை வெளியிடுவது.. திரும்பப் பெறுவது.. repeat! : த.வெ.க அரசுக்கு எழும் கண்டனங்கள்!
-
16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
சட்டம், ஒழுங்கு தகவல்கள் RTI கீழ் விலக்கு.. கடும் எதிர்ப்பு கிளம்பியதும் U-Turn அடித்த தவெக அரசு!
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!