Politics

தனி மனித ஒழுக்கம் - முதலில் Truculent Vitriol Kazhaga தலைவருக்கு அருகதை இருக்கிறதா? : திமுக IT WING!

த.வெ.க ஆட்சியில் பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதுகாப்பு இருக்கிறதா? என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது. தினமும் பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று சிங்கப்பெண் படையை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், "தனி மனித ஒழுக்கம் இருந்தால் சமூகம் தன்னால் மாறும்" என்று பேசியுள்ளார். இதற்கு உங்கள் கட்சியில் இருப்பவர்களுக்கு முதலில் தனிமனித ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தனி மனித ஒழுக்கம் குறித்து பேச முதலில் Truculent Vitriol Kazhaga தலைவருக்கு அருகதை இருக்கிறதா? தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தனி மனித ஒழுக்கம் இருந்தால் சமூகம் தன்னால் மாறும்" என்று மேடையில் மைக் பிடித்து தவெக தலைவர் தத்துவம் பேசுவது என்பது அப்பட்டமான Gaslighting! Script படித்து கேமராவுக்கு முன் Acting பண்ணுவது வேறு, கள எதார்த்தம் வேறு.

சொந்தக் கட்சி நிர்வாகிகளுக்கும், இணையத்தில் வசைபாடும் Abusive Warriorsகளுக்கும் குறைந்தபட்ச ஒழுக்கத்தைக் கூட கற்றுத் தராத ஒரு தலைவர், சமூகத்திற்கு வகுப்பெடுப்பது Pure Cringe மற்றும் Main Character Syndromeன் உச்சம்! கொஞ்சம் எதார்த்தத்தைப் பாருங்க, Pls Touch Grass!

பெண்கள் பாதுகாப்பிற்க்கு ஏற்கனவே உள்ள முன்னெடுப்பின் மீது 'சிங்கப்பெண் படை' என Sticker ஒட்டி ஒரு வெற்று PR Stunt. ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன?

தூத்துக்குடியில் வேலை தேடி வந்த பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும், சென்னையில் சிறுமியைச் சிதைத்த POCSO வழக்கில் கைதானதும் உங்களது சொந்த தவெக நிர்வாகிகள்தான்!

சொந்த கட்சியிலேயே Predatorsஐ பாதுகாத்துக்கொண்டு Women Safety பற்றிப் பேசுவது எவ்வளவு பெரிய Audacity?

களத்தில் இந்த லட்சணம் என்றால், இணையத்தில் உங்களது Abusive Warriors பெண்களை குறி வைத்து செய்வது முழுமையான Cyberbullying and Online harassment!

உங்களை நோக்கி நியாயமான ஒரு விமர்சனம் வைத்தால் உடனே Trigger ஆகி, அப்பெண்களின் குடும்பத்தாரை ஆபாசமாக வசைபாடுவது, Doxxing செய்வது, மற்றும் Character Assassination செய்வதுதான் உங்களது Online Mafiaவின் வேலையா?

இதைத் தட்டிக்கேட்கத் திராணியின்றி வேடிக்கை பார்க்கும் உங்களின் Two faced Leadership பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

You are just enabling an Echo Chamber of abuse!

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், தங்களை மாற்று அரசியல் என்று சொல்லிக்கொள்வது அப்பட்டமான Delusional மனநிலை.

உங்களிடம் எந்தவொரு Accountability இல்லை என்பதை ஒட்டுமொத்த தமிழ்நாடும் Clock செய்துவிட்டது." என தெரிவித்துள்ளது.

Also Read: “அரசு அதிகாரிகளுக்கு இணையாக தவெக நிர்வாகிகள்.. தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் இடையூறு.. மக்கள் அதிருப்தி!”