Politics
“கவர்ச்சியால் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றீர்கள்?” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 62,992 வாக்கு பெற்று, கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 4) சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு,
“என்றைக்கும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, ‘தி.மு.க.வின் கோட்டை’ என்பதை தொகுதி மக்கள் இந்த தேர்தல் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். என்றைக்கும் நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாகதான் இருப்பேன்.
இந்தத் தேர்தலில் நாம் சந்தித்துள்ள தோல்வி நிரந்தரமல்ல. நிச்சயம் மீண்டும் வென்று காட்டுவோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இந்த தேர்தல் முடிவு நாம் எதிர்பார்க்காத முடிவு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களே எதிர்பார்க்காத முடிவு. ஏன்.. இப்போதைய முதலமைச்சரே எதிர்பார்க்காத முடிவுதான் இது.
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை உருப்படியாக ஒரு திட்டத்தை இந்த அரசு கொண்டுவந்துள்ளது என அவர்களால் சொல்ல முடியுமா?
தமிழ்நாட்டில் ஏற்கனவே பணியில் இருக்கும் காவலர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, ‘சிங்கப்பெண் திட்டம்’ கொண்டுவரப் போகிறோம் என அறிவித்து, அதுவும் இதுவரை வரவில்லை. ஒரு கூடுதல் செலவில்லாத திட்டத்தை தொடங்கக்கூட வக்கில்லாத Sofa மாடல் ஆட்சிதான் இந்த த.வெ.க ஆட்சி அமைந்துள்ளது.
இந்த நிலையில், திருச்சி சென்று கோவமாக பேசிவிட்டு வந்திருக்கிறார் முதலமைச்சர் விஜய். ‘கவர்ச்சி’ என்ற சொல்லைச் சுட்டிக்காட்டிவேற பேசியிருக்கிறார்.
நான் கேட்கிறேன்... த.வெ.க கவர்ச்சியில் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றது என இரண்டு காரணங்கள் சொல்ல முடியுமா? போராட்டம் செய்தீர்களா? சிறை சென்றிருக்கிறீர்களா? மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறீர்களா? மக்களையாவது உருப்படியாக சந்தித்தீர்களா? உங்களது வேட்பாளர்கள் பெயராவது உங்களுக்கு தெரியுமா?
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிப் பூச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அதைப் பற்றி பேச வக்கில்லாமல் பயந்து இன்றைக்கு ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது யார்?
இது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கி சீர்கெட்டு இருப்பதைத் தட்டிக்கேட்டால், “ஆறு மாதங்கள் சும்மா இருப்போம்” என்றீர்களே என அழுது புலம்புகிறார் முதலமைச்சர் விஜய். வாக்குறுதிகளை நிறைவேற்றதான் கால அவகாசமே தவிர, இதற்கு இல்லை.”
Also Read
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”
-
“ஒவ்வொரு வீட்டிலும் கலைஞரின் திட்டங்கள்.. மக்களுக்கான தலைவர்.. இதுதான் கலைஞர்” : கனிமொழி எம்.பி புகழாரம்!