Politics
அம்பலமாகும் TVK-வின் இரட்டை வேடம்... மோடிக்கு ஆதரவாக பேசும் தவெக பெண் MLA - வைரலாகும் வீடியோ!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜய் கட்சியான தவெக பெரும்பான்மை பெற்றது. இந்த சூழலில் தவெக கட்சி தொடங்கிய போது பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறியிருந்தார். மேலும் பாசிச, மதவாத சக்திகளுக்கு எதிராக தனது அரசியல் இருக்கும் என்றும் விஜய் தெரிவித்திருந்தார்
எனினும் தமிழ்நாட்டு நலன் சார்ந்த அநேக பிரச்சினைகளுக்கு ஒன்றிய பாஜக அரசை குறிப்பிட்டு விஜய் எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் விஜய், பாஜகவின் பி டீம் என்று விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் அவர் பாஜகவை எதிர்த்து பேசாமலே இருந்து வந்தார்.
இந்த சூழலில் தற்போது ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும், விஜய்க்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் இருந்து வரும் சூழலில், ஆளுநர் அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருந்துள்ளார்.
இதனை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆளுநருக்கு கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், தற்போது வரை தவெக தலைவர் விஜயோ அல்லது அக்கட்சியினரோ ஆளுநருக்கு எதிராக கண்டனங்கள் இல்லை, வாயை கூட திறக்கவில்லை. இப்படியான சூழலில் சிவகாசி தவெக பெண் எம்எல்ஏ கீர்த்தனா, மோடிக்கு ஆதரவாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் பாஜக ஆதரவு ஊடகமான தமிழ் ஜனம் Youtube சேனலுக்கு பேட்டியளித்த அவர் பேசுகையில்,
‘‘தமிழகத்தில் ஏதாவது ஒன்று நடக்கவில்லை என்றால் உடனே மோடிதான் காரணம், பாஜதான் காரணம், என்டிஏ கூட்டணிதான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதே மோடிதான் உஜ்வாலா திட்டத்தின் மூலம் 10 கோடி ஏழை மக்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கினார். நாமெல்லாம் முன்பு கேஸ் சிலிண்டர் பதிந்தால் 15 நாள் 30 நாள் கழித்து தான் சிலிண்டர் கிடைக்கும். அதனை மாற்றி தற்போது உடனே சிலிண்டர் வழங்கியது மோடி தான். மானியத்தொகை வழங்கியது யார்? அதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது அமெரிக்க - ஈரான் போர் நடந்து வரும் வேளையில் கேஸ் தட்டுப்பாடு என்று பேசக்கூடாது’’ என்றுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி தற்போது பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு இருக்கும்போது, ஆங்கில செய்தி நிறுவனமான ANI நிறுவனத்திடம் ஆங்கிலத்தில் உரையாடல் செய்யாமல், இந்தியில் உரையாடல் செய்து பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளாகியவர் தவெக பெண் MLA கீர்த்தனா என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!
-
“பா.ஜ.க பாதையில் செல்லும் த.வெ.க. அரசு ; தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்” : கி.வீரமணி ஆவேசம்!