Politics
TN Election 2026 : CNN செய்தி பெயரில் போலி கருத்துக்கணிப்பு... அ.தி.மு.க பரப்பிய பொய் செய்தி அம்பலம்!
தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டு மக்களும் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.
இந்த சூழலில் ஒவ்வொரு முறை தேர்தலின்போதும் பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் வெளியான லோக் போல், அக்னி நியூஸ், Insight Election போன்ற நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் அனைத்தும், திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றே கூறியிருந்தது.
எந்த நிறுவனமும் அதிமுக கூட்டணி வெல்லும் என்று செய்தி வெளியிடாத நிலையில், 130-140 தொகுதி வரை அதிமுக வென்று ஆட்சியை கைப்பற்றும் CNN செய்தி நிறுவனம் வெளியிட்டதாக போலி செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த செய்தி போலியானது என்று Youturn விளக்கம் அளித்துள்ளது. அதாவது இந்த செய்தியானது Gemini AI மூலம் உருவாக்கப்பட்டது என்றும், இது போன்ற எந்த கருத்து கணிப்பையும் CNN NEWS 18 ஊடகம் வெளியிடவில்லை என்றும் Youturn குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே அதிமுக கூட்டணிக்கு ஆதரவான நிலையில் தமிழ்நாட்டில் இல்லை என்பதால், அதிமுக தன்னை தானே விளம்பரப்படுத்திக்கொள்ள இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளதாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!