Politics
கர்தவ்ய த்வார்.. மீண்டும் மீண்டும் இந்தி.. எத்தனை முறை அடித்தாலும் திருந்தாத பாஜக - கொந்தளித்த தலைவர்கள்!
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாடு முழுவதும் இந்துத்துவ கொள்கையை கொண்டும், இந்திமயமாக்குவதையும் மட்டுமே முனைப்புடன் செய்து வருகிறது. பல வகைகளில் இந்தியை திணிக்க முயன்று வரும் பாஜகவுக்கு தமிழ்நாடு எப்போதும் குட்டு கொடுத்து தான் வருகிறது. இருப்பினும் இந்தியை எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட ஒன்றிய பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது.
அதற்காகதான் தேசிய கல்வி கொள்கை மூலம் தமிழ்நாட்டுக்குள் மும்மொழிக் கொள்கையை திணிக்க ஒன்றிய பாஜக அரசு எண்ணியது. ஆனால் அதற்கும் திராவிட மாடல் அரசு பிடரியிலேயே அடித்து துரத்திவிட்டது. இதனால் கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இன்னும் வழங்காமல் வஞ்சித்து வருகிறது. எனினும் தங்கள் கொள்கையில் இருந்து பின் வாங்காமல் தமிழ்நாடு இருந்து வருகிறது.
எத்தனை முறை அவமானப்பட்டாலும் நாங்கள் திருந்த மாட்டோம்... துப்பினால் துடைச்சுட்டு போய்ட்டே இருப்போம்.. என்று சூடு சொரணை இல்லாத ஒன்றிய பாஜக, மீண்டும் மீண்டும் இந்தியை தமிழ்நாட்டுக்குள் எதோ ஒரு வடிவத்தில் நுழைந்துவிட துடித்துக்கொண்டிருக்கிது.
அந்த வகையில், தற்போது புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல இரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என்று தெற்கு இரயில்வே இந்தியில் பெயர் வைத்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
=> சு.வெங்கடேசன் எம்.பி :
புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல இரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு இரயில்வே. “கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை “இந்தித் திணிப்பு” மட்டுமே. தெற்கு இரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.
=> தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. :
புதிதாக கட்டப்பட்டுள்ள, திருச்சி மண்டல தெற்கு இரயில்வே அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் சூட்டியிருப்பது, புறவாசல் வழியாக இந்தியைத் திணிக்கும் மற்றொரு முயற்சியாகும். தமிழர்களின் மொழிப் பற்றினையும், உணர்வுகளையும் புறக்கணித்து, இந்தியில் பெயரிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக இத்தகைய இந்தித் திணிப்பைத் தவிர்த்து, தமிழில் பெயரிட நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.
=> திருச்சி சிவா எம்.பி. :
திருச்சி மண்டல இரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ள முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு இந்தி பேசாத மாநிலம். இப்படியாக பெயரை மாற்றுவது மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு உணர்வுகளை பாதிக்கும். ஏற்கனவே உள்ள பெயரை மாற்றுவது தேவையற்ற அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
=> கனிமொழி என்.வி.என். சோமு :
தெற்கு இரயில்வேயின் திருச்சி மண்டல அலுவலக வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என்ற இந்திப் பெயரை அப்படியே தமிழில் எழுதி வைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும் மொழி உரிமைக்கும் எதிரான இத்தகைய செயல்கள், மக்களிடையே தேவையற்ற கொந்தளிப்பை ஏற்படுத்தும்..!
பொதுப் பயன்பாட்டு இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் அந்தந்த மாநில மொழிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் முறையானது. ரயில்வே நிர்வாகம் இந்தித் திணிப்பு முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அப்பெயரைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். மக்களின் மொழிப் பற்றைச் சோதிக்காமல், தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்..!!
Also Read
-
ஊடகங்களையும் விட்டுவைக்காத த.வெ.க... கண்டுகொள்ளாத விஜய்.. கொந்தளித்த பத்திரிகையார் அமைப்புகள்!
-
அனைவரையும் உள்ளடக்கியதே திராவிட எஞ்சின் ஆட்சி… ஒன்றுக்கும் உதவாததே பா.ஜ.க எஞ்சின் - முரசொலி தலையங்கம்!
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!