Politics
தி.மு.க கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க! : அண்ணா அறிவாலயத்தில் உறுதி செய்த பிரேமலதா விஜயகாந்த்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 நெருங்கும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவான மக்கள் குரல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மக்களுக்கான சமூக நீதியை சமூக உரிமைகளாக வழங்கிடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் உறுதியான நிலைப்பாட்டுடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து இயங்கி வருகிறது.
அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முத்தாய்ப்பான திட்டங்கள் எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
குறிப்பாக, மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் எளிய மக்களின் பொருளாதார நிலையும், கல்வி நிலையும் உயர்ந்துள்ளது.
இப்படியான சூழலில், மக்கள் விரும்பும் கூட்டணியாக தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும், சாதி - மத பிரிவினையை வளர்த்து மக்களின் வெறுப்பைப் பெற்றுவரும் பிளவுவாத அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிரெதிர் சந்திக்க உள்ளது.
இந்நிலையில், மக்கள் மனதில் வேரூன்றியிருக்கும் தி.மு.க கூட்டணிக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில், இன்றைய நாள் (பிப்.19) தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைத்துக் கொண்டார்.
இந்த கூட்டணியால், தே.மு.தி.க.விற்கு தொடர்ந்து வலைவீசி வந்த அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.
Also Read
-
ஒவ்வொரு தொண்டரும் ஒரு நிர்வாகி ; உடன்பிறப்புகள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் : முரசொலி!
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!