Politics
விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! : எங்கு? எப்போது?
நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
இது குறித்து முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தவை பின்வருமாறு,
கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும்;
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் 23.11.2025 அன்று தஞ்சாவூரிலும், 24.11.2025 அன்று திருவாரூரிலும் காலை 10.00 மணியளவில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
Also Read
-
தமிழ்நாடு விளையாட்டு துறையின் சாதனைகள் : முழு பட்டியல் இதோ!
-
“கழக அரசுக்கும், மீனவர்களுக்குமான உறவு கடலைப் போலவே ஆழமானது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி 4 தொழிலாளர் விரோத சட்டங்கள் அமல் : ஒன்றிய பா.ஜ.க அரசின் அராஜகம்!
-
”விவசாயிகளின் கண்ணீரை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி” : செல்வப்பெருந்தகை ஆவேசம்!
-
சென்னையில் ரூ.89.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 584 குடியிருப்புகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!