Politics
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
கும்பகோணத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் வீடு இல்லாத 65 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரை ஒரு லட்சத்து 27 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் கடந்த செப்டம்பர் முதல் தேதியில் இருந்து இன்று வரை 59 நாட்கள் ஆன நிலையில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 170 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 95 ஆயிரம் டன் நெல் மூட்டைகளில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.
தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 20,000 டன் அளவிற்கு நெல் மூட்டைகள் உள்ளது. இன்னும் 35 ஆயிரம் டன் அளவிற்கு நெல்கொள்முதல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பூதலூர், திருவையாறு ஆகிய வட்டங்களில் அதிக அளவு நெல் வரத்து உள்ளது. சமீபத்திய மழையினால் குறுவை மற்றும் சம்பா பருவ நெல் பயிர்கள் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளையும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?