Politics
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா இன்று (செப். 17) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை “சமூகநீதி நாள்” என அறிவித்து அரசாணை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து “சமூக நீதி நாள்” உறுதிமொழியை எடுத்து வருகின்றனர். மேலும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
அந்த வகையில், தந்தை பெரியார் பிறந்த நாளையோட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் திமுக தொண்டர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
அதே போல கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, திருச்சியில் பெரியாரின் திருவுருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
சமூகநீதி நாளுக்கான உறுதிமொழிகள்!
“பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்,
'எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப் பிடிப்பேன், சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும்
கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக
- என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுட பற்றும் மனிதாபி மானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும், சமூக நீதியை அடித்தளமாக கொண்டு சமுதாயம் அமைக்கும்
எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்”
Also Read
-
“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“முதல்வர் விஜய் பேச்சு ஆணவத்தின் உச்சம் ; அதிகாரத் திமிரின் வெளிப்பாடு” : கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!