Politics
“இதுதான் பா.ஜ.க.விற்கு ஆதரவான வாக்காளர் சிறப்பு திருத்தப் பட்டியலின் (SIR) உத்தியா?” : தேஜஸ்வி கண்டனம்!
இந்திய அளவில் இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு இடையில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிற சுமார் 2.92 லட்சம் வாக்காளர்களின் வீட்டு எண் ‘0’,‘00’, ‘000’ என குறிப்பிடப்பட்டுள்ளது மக்களாட்சி முறைக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
குறிப்பாக, சிறப்பு திருத்தத்திற்கு இருப்பிட சான்றுகள் அவசியம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வீட்டு எண் இல்லாத 2.92 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அண்மையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இது குறித்த விவரங்களை ஆதாரத்துடன் வெளியிட்ட நிலையில், தற்போது மேலும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
இவ்வரிசையில், பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவரும், பீகார் மாநில துணை முதல்வருமான விஜய் சின்ஹா இரு வாக்காளர் அட்டைகள் பெற்றிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி, “பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரும், பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சருமான விஜய் சின்ஹா, இரு மாவட்டங்களில் வாக்குரிமை பெற்றிருக்கிறார். அவரின் இந்த இரு வாக்காளர் அட்டையும், தேர்தல் ஆணையத்தின் திருத்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இதுதான் வாக்காளர் சிறப்பு திருத்தமா?
பா.ஜ.க.வினருக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?
விஜய் சின்ஹாவிற்கு பங்கிபூர் தொகுதியில் வயது 60, லக்கிசராய் தொகுதியில் வயது 57.
பீகாரின் சிறப்பு திருத்த பட்டியலில் விஜய் சின்ஹாவின் இரு வாக்காளர் பதிவு எண்களும் இடம்பெற்றுள்ளன.
அப்போது அவருக்கு இரு வாக்குகள் உள்ளனவா? அல்லது முறைகேட்டில் ஈடுபட்டதால் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் வழங்குமா?
இதுதான் பா.ஜ.க.வினருக்கு ஆதரவாக நடைமுறைப்படுத்தப்படும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பட்டியலின் (SIR) உத்தியா?” என கண்டனம் தெரிவித்து தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
நேரடியாக பெங்களூரு சென்று ஆய்வு... TNSTC Multi Axle பேருந்தை ஓட்டி சோதனை நடத்திய அமைச்சர் சிவசங்கர் !
-
பூம்புகாரில் ரூ.21.98 கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்... விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்...
-
இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு... முக்கிய விதிகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!