Politics

விமான விபத்து ஏற்பட காரணம் ஒன்றிய அரசின் அலட்சியமா? விமான போக்குவரத்து துறையில் அதிர்ச்சி... விவரம் என்ன?

இந்திய விமான போக்குவரத்து துறையில் மொத்தம் 1063 உயர் தொழில்நுட்ப அதிகாரிகள் பணியிடங்கள் உள்ளன. அதில் 510 பணியிடங்கள் காலியாக உள்ள தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானங்களின் அன்றாட இயக்கம், பாதுகாப்பு, தொழில்நுட்ப ஆய்வுகள் ஆகியவற்றை கண்காணிக்கும் விமான இயக்க ஆய்வாளர்கள், முதன்மை ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் மற்ற பணியாளர்களுக்கு அதிக பணிச்சுமை உள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்ல உயர் அதிகாரிகள் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. 18 விமான போக்குவரத்து துறை இயக்குநர் தலைவர்கள் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளது. இதில் பல பணியிடங்கள் கடந்த 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணியிடங்கள் காலியாக உள்ளதால் இணை இயக்குநர் பணியிடங்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் நியமனம் நடத்த உரிய அனுபவம் பெற்றவர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகள் துணை இயக்குநர்களாக பதவி வகித்தால்தான் இணை இயக்குநர்களாக நியமிக்க முடியும் என்று விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 9 ஆம் தேதி விமான போக்குவரத்து துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த பிரச்னைகள் கூட்டத்தில் எழுப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read: 100க்கும் மேற்பட்ட கார்கள் திருட்டு... வெளிநாட்டுக்கு விற்பனை.. வடமாநில இளைஞரை கைது செய்த சென்னை போலீஸ் !