Politics
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, 6 காவல் காவலர்கள் உடனடியாக அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை CBCID-க்கு மாற்றி காவல்துறை டி.ஜி.பி உத்தரவிட்டதோடு, மாவட்ட எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மானாமதுரை டி.எஸ்.பி சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்த துரித நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தாலும், எதிர்க்கட்சிகள் இதனை வேண்டுமென்றே அரசியலாக்க முயன்று வருகின்றனர். இந்த சூழலில் , இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரியகருப்பன், மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் நேரில் கடந்த ஜூலை 1-ம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாக அஜித்குமாரின் தாயாரிடம் ஆறுதல் கூறினார். மேலும் தற்போது நிகழ்ந்த இந்த சம்பவம் பெரிய இழப்பு என்றும், அதற்கு "SORRY’மா..." என்று மன்னிப்பும் கேட்டார். அதோடு இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும், தங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அதன்படி உயிரிழந்த இளைஞர் அஜித்தின் தம்பிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், வீட்டு மனை பட்டாவும் மறுநாளே (ஜூலை 02) வழங்கப்பட்டது. இப்படியாக அரசின் இந்த துரித நடவடிக்கைக்கு மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில், ஒரு முதலமைச்சரே மன்னிப்புக் கேட்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இருப்பினும் இதனை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியலாக்க பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றனர். இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
SORRY’மா...
இந்த வார்த்தைகளை மொபைல் ஸ்பீக்கரில் கேட்டதும் நெகிழ்ந்தோர் பலர், கண்களின் ஓரம் லேசாக கண்ணீர் சொரிந்தோர் பலர் !
என்னைப்போல கூடவே இருந்து பழகுகின்ற பெரும் வாய்ப்பைப்பெற்றவர்களுக்கு தெரியும், அந்த வார்த்தைகளின் ஆழம், அதில் நெகிழ்ந்தோடும் ஈரம். அவை சம்பிரதாய வார்த்தைகள் அல்ல. அதை நாங்கள் அறிவோம்.
அடடே... நல்ல சான்ஸ் எதிர்க்கட்சி மிஸ் பண்ணிடுச்சி என அரசியல் ஓநாய்கள் ஓலமிட்டன. அச்சச்சோ ஆட்சிக்கு அவப்பேராகுமே என சிலர் அவதிப்பட்டனர். அரசைச் சார்ந்தவர்களால் தவறு நிகழ்ந்துவிட்டது, யாரோ செய்த தவறுதானே, எனக்கென்ன என்றிருக்கவில்லை.
தட்டிக்கழிக்கவில்லை, மூடி மறைக்கவில்லை.
முறையான விசாரணைகள், அதுவும் துரிதமாக. தயங்கவில்லை தாமே முன்னின்றார், பொறுப்பேற்றார்,
நினைத்திருந்தால் என்னவெல்லாமோ செய்திருக்கலாம் ! வேறு யாராவது இந்த நாற்காலியில் இருந்திருந்தால் கையில் ஆட்சி, போலிஸ், இன்டெலிஜென்ஸ், அரசு இயந்திரம், ஐ.டி.விங், நேரேட்டிவ், செட்டிங் என என்னவெல்லாமோ செய்திருப்பார்கள் !
ஆனால் இவர் இதுவரை யாரும் செய்யத் துணிந்திடாத ஒன்றைச் செய்து, "மாண்புமிகு"வென உயர்ந்து நிற்கிறார் திராவிட நாயகர், ஒப்பற்ற நமது முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின்.
தனியொருவராக இந்த பிரச்சனையை மிகச் சரியாக ஒரு முதிர்ந்த அரசியல் ஆளுமையாக, தமிழ்நாடு அவர் மீது வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும் பாசதிற்கும் பாத்திரமாக, ஒரு 'அப்பா' வாக... ஒரே ஃபோன் கால் !
ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் மனசாட்சி உள்ள அனைவரும் நமது முதலமைச்சர் எப்படி பட்ட மகத்தான மனிதர் / தலைவர் என்பதை முழுமையாக புரிந்து கொண்டனர்.
He did not pass the responsibility. He Owned up to the mistakes of his subordinates as a Responsible LEADER and more importantly as a Human Bieng with a heart of gold. "யாரோ செய்த தவறுக்கு இவர் எதற்கு மனிப்பு கேட்கவேண்டும்" என்று பலர் என்னிடம் கேட்டனர்...யோசித்து பார்த்தேன்... பின்பு தெரிந்தது...
ஏன்னென்றால் இவர் தலைமைப் பண்புகள் நிரம்பியுள்ள, மனசாட்சியுள்ள, மக்களின் முழு நம்பிக்கையை பெற்றுள்ள ஒரே முதலமைச்சர். பதவியை பொறுப்பு என்று அழைக்கும் ஒரே முதலமைச்சர்.
ஆட்சி வரும் போகும் ஆனால் எந்நேரத்திலும் நியாயத்தின் பக்கம், ஜனநாயகத்தின் பாதுகாவலராக அடிப்படை உரிமைகளின் பக்கம், மனிதாபிமானத்தின் பக்கம், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் நின்றார் தமிழ்நாட்டின் முதலமைச்சர், எங்கள் பெருமைமிக்க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!