Politics
மீண்டும் மீண்டும் இந்தித்திணிப்பு... மராட்டிய மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து பின்வாங்கிய மாநில பாஜக அரசு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. வந்ததில் இருந்து அந்த அரசு பல்வேறு துறைகளில் இந்தியை திணித்து வருவதாக விமர்சனம் எழுந்தது. அந்த வகையில் பள்ளிகளில் மூன்றாம் மொழியாக இந்தி மொழியை திணிக்க மகாராஷ்டிரா பாஜக அரசு முடிவு செய்தது.
மாநில அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் கிடையாது என்று அறிவித்தது. அதனை தொடர்ந்த இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. ந்த மாநில பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், இந்தி மொழி திணிப்பில் இருந்து விலகினார். இந்தி திணிக்கப்படாது என்றும் அவர் அறிவித்தார்.
எனினும் அடங்காத மஹாராஷ்டிரா அரசு ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அங்கு மீண்டும் போராட்டம் வெடித்தது. மாநில அரசின் இந்த முடிவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும், அவரது சகோதரரும் மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரே இருவரும் மாபெரும் போராட்டம் அறிவித்தனர்.
இது தவிர பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற முடிவு கைவிடப்படுவதாக மஹாராஷ்டிரா பாஜக அரசு அறிவித்துள்ளது.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!