Politics

"மெல்ல மெல்ல அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறும் அதிமுக" - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய பகுதிகளில் 5 கோடி மதிப்பிலான மக்கள் நலபணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட மேடையில் எடப்பாடி பழனிச்சாமியை பேச விடாது, அமித்ஷா மட்டும் பேசி கூட்டணியை அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மௌன சாட்சியாக அமர்ந்திருந்தார்.

எப்போதும் திராவிட இயக்கத்தினர் என்று சொல்லிக் கொள்பவர்கள், நேற்று மதுரையில் நடந்த நடந்த சம்பவம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. திராவிட இயக்க தலைவர்களை விமர்சிக்கும் மேடையில் அதிமுக அமைச்சர்கள் அமைதியாக அமரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு மிகுந்த அவமானகரமாக சம்பவமாக உள்ளது. இது மெல்ல மெல்ல அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறி வருவதை காட்டுகிறது.

கீழடியில் படைக்கப்பட்ட தமிழரின் தொன்மையை அங்கீகரிக்காதவர்கள் தமிழ் கடவுள் முருகனை கையில் எடுத்திருக்கிறார்கள்.தமிழரின் தொன்மையை, பெருமையை நிலைநாட்டக் கூடாது. அப்படி ஒப்புக்கொண்டால் இந்திய திணிக்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.

அதே சமயத்தில் மக்களை பிளவுபடுத்தி மத ரீதியாக பிரித்து வட இந்தியாவில் தாங்கள் ஆட்சிக்கு வந்தது போல இங்கேயும் செயல்பட அவர்கள் எண்ணுகிறார்கள்.தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள். பெரியார், அண்ணா திராவிட இயக்க தலைவர்கள் வழியில் வந்த கொள்கைகளை பார்ப்பவர்கள். அவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.

Also Read: 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்... இந்தியா கூட்டணி கட்சிகளிடம் படுதோல்வியை சந்தித்த பாஜக !