Politics
"அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்" - அமைச்சர் கே.என்.நேரு !
புதுக்கோட்டையில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுகவில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்ற இடங்களில் எல்லாம் திமுக கட்சி தோழர்கள் உற்சாகமாக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஏழாவது முறையாக திமுக தான் ஆட்சி அமைக்கும். மீண்டும் முதலமைச்சராக மு க ஸ்டாலின் வருவார்.
நிர்வாகிகளிடம் பேசும் போது அரசு சார்பில் என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கின்றனர். அதையும் நான் குறித்து வைத்துள்ளேன். அரசு சார்பாக செய்ய வேண்டிய பணிகளை செய்து முடிப்போம்.
எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து திமுகவையும் திமுக தலைவரையும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதனை தாண்டி தான். பத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி அடைந்துள்ளது. அதேபோல் அடுத்து வரும் சட்டமன்றத்தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெறும்.
பொதுமக்கள் முழுமையாக தமிழ்நாடு முதலமைச்சருக்குதான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். எந்த காலத்திலும் இதுபோல் திமுக தோழர்கள் உற்சாகமாக இருந்து பார்த்ததில்லை. தற்போது அவர்கள் உற்சாகமாக இருந்து எங்களுக்கும் உற்சாகமூட்டி இருக்கின்றனர். என்னிடம் 41 தொகுதிகளுக்கான பொறுப்பு கொடுத்துள்ளனர். அதில் இரண்டு மூன்று தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளும் திமுகவுக்கு சாதகமாகத்தான் உள்ளது"என்று கூறினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!