Politics
உண்மையை ஒப்புகொண்ட அமித்ஷா! : வர்ணாசிரம கொள்கை பரப்பலுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில்!
இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும், மொழி, மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
குறிப்பாக, இந்தியா முழுக்க இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதை ஒற்றை நோக்காகக் கொண்டு, மாநில மொழிகளை அழித்து வருவது, பா.ஜ.க.வின் அண்மை நடவடிக்கைகளால் அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகதான் புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரையறைகளும் அமைந்துள்ளன.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி, மும்மொழி கொள்கைகள் முன்மொழியப்பட்டு, இந்திய அளவில் இந்தி ஆதிக்கத்தை முன்னெடுக்கவும், சமஸ்கிருதத்தை திணிக்கவும் நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இந்திய அளவில் பண்பாட்டை வளர்க்கிறோம் என்ற பெயரில், சமஸ்கிருதத்தை கற்றுத்தர மும்மொழிக் கொள்கை திட்டத்தின் வழி, செயலாற்ற எண்ணுகிறது ஒன்றிய பா.ஜ.க.
இதனை எதிர்த்து, இந்திய மொழிகள் அழிக்கப்படும் வரிசையில் தமிழ் இணைந்து விடக்கூடாது என்பதற்காக, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை எவ்வித சமரசமும் இன்றி கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக, ஒன்றிய பா.ஜ.க அரசு கல்வி நிதியை நிறுத்திய நிலையிலும், தமிழ்நாடு தந்நிலையைவிட்டு விலகாமல் இருக்கிறது.
இந்நிலையில், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் புதிய கல்விக் கொள்கை என்பது இந்துத்துவ பரப்புரை கொள்கையாக, மொழித்திணிப்பு கொள்கையாக இருக்கிறது என விமர்சிப்பது, உண்மைதான் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே ஒப்புகொண்டுள்ளார்.
டெல்லியில் சமஸ்கிருதம் சார்ந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அஷ்டாதஷி வழி, சுமார் 18 திட்டங்கள் சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது” என பேசியுள்ளார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சொன்னதைதான் நாங்களும் சொல்கிறோம். வர்ணாசிரமத்தைத் உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம். இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை” என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?