Politics

"தியாகராயரின் திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்" - துணை முதலமைச்சர் உதயநிதி !

நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாள்விழாவை முன்னிட்டு அவரின் புகழை பல்வேறு அரசியல் தலைவர்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சர் பிட்டி தியாகராயரின் திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம் என துணை முதலலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமைகளாய் வாழ்ந்திருந்த திராவிடர்களை உயர்த்திட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை நிறுவிய சர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் இன்று!தென்னிந்திய நல உரிமைச் சங்கமே, அது நடத்திய இதழின் பெயரால் 'நீதிக்கட்சி' என்றானது வரலாறு.

சமூகத்தில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராக Non-Brahmin Manifesto-வை வெளியிட்டு பல்வேறு சீர்திருத்தங்களை செயலாக்கிக் காட்டியவர். பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி - வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேற வேண்டும் என்று தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் நம் தியாகராயர் அவர்கள்.

எல்லோருக்கும் - எல்லாம் எனும் திராவிட மாடல் தத்துவத்துக்கான விதையை தூவிய பிட்டி தியாகராயர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!அவர் காட்டிய வழியில் திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: உக்ரைனிடமிருந்து குர்ஸ்க் பிராந்தியத்தை முழுவதுமாக மீட்டதாக ரஷ்யா அறிவிப்பு: 76,000 உக்ரைன் வீரர்கள் பலி?