Politics
சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்: பிட்டி தியாகராயரை புகழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாள்விழாவை முன்னிட்டு அவரின் புகழை பல்வேறு அரசியல் தலைவர்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சர் பிட்டி தியாகராயரின் திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம் என துணை முதலலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "பிட்டி தியாகராயர் அவர்கள் பிறந்தநாள்:கல்விக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் இணைப்பு, மதிய உணவுத் திட்டம் எனச் சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்.
நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்த மாண்பாளராக உயர்ந்தவர்.எவருக்காகவும் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாத 'வெள்ளுடை வேந்தர்' எனப் பெயரும் பெற்றவர்.
இன்றைய நம் திராவிட மாடல் ஆட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே வலுவான கொள்கை அடித்தளம் அமைத்த தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்"என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!