Politics

உரிமைக்கான குரலை எழுப்பியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் தங்கம் தென்னரசு !

தமிழ்நாடு முதலமைச்சரும், கழக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்கு பகுதி திமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதிக்கு 72வயதானாலும் 27வயது இளைஞனை போல் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார். திமுகவின் ஆட்சி மாடல் தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் ஆறாக சென்று இருக்கிறது.

நிதி நிலை அறிக்கையில் ஒவ்வொரு துறைக்கு அதிகமான தேவைகள் இருந்தது, எந்தெந்த துறைக்கு எவ்வளவு பணம் ஒதுக்குவது குறித்து எங்களுக்கு குழப்பமாக இருந்தது. அதற்கு ஒரு முடிவு கட்டியவர் தான் முதலமைச்சர்தான். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் இந்த பட்ஜெட்டை தொடங்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.ஒவ்வொரு பக்கத்திலும் நிதி நிலை அறிக்கையில் ஒரு புதிய திட்டம் இருக்கும், விளிம்பு மக்கள் முதல் திருநங்கைகளுக்கு வரை இந்த பட்ஜெட்டில் இடம் உள்ளது

தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவின் அரசியல் வரலாற்றை மாற்றும் வல்லமை நம் தளபதிக்கு உண்டு. தமிழ்நாட்டின் நிதி அதிகாரம், மொழி, அரசியல் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஒன்றிய அரசு. இதை சுதாரித்து தென் மாநில தலைவர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்டினார். அனைவரையும் ஒரு புள்ளியில் இணைத்து உரிமைக்கான குரலை எழுப்பியவர் நம் முதலமைச்சர். தமிழ்நாட்டில் தளபதி முதலமைச்சராக இருப்பதால் தான் டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் குரலாக நாம் உள்ளோம். இந்தியாவின் வரலாறு இங்கிருந்துதான் எழுதப்படும் என்ற வரலாறை நம் தளபதி ப்டைத்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் நிதி அதிகாரத்தை ஒன்றிய அரசு பறித்துக் கொள்கிறது. மேலும் மொழியையும் பறிக்க நினைக்கிறது. ஒன்றிய அரசு தொடர்ந்து பல்வேறு நெருக்கடி கொடுத்து வருகிறது.1000 கோடி மட்டுமல்லாமல் 2000 கோடி கொடுத்தாலும் மும்மொழி ஏற்றுக் கொள்ள மாட்டோம், எவ்வளவு கோடி இழந்தாலும் உயிர்மூச்சான மொழிக்கொள்கையை இழக்க மாட்டோம் என கூறியவர் நம் தன்மான தலைவர் தளபதி. திமுக ஆட்சி நீடிக்கும் வரை அனைவருக்கும் விடியல் காலம், விடியல் பயணம் தொடரும்" என்று கூறினார்.

Also Read: கோடை விடுமுறை : சென்னை விமான நிலையத்தில் 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு !