Politics

கோவில் அறங்காவலராக இஸ்லாமியர் : அவதூறு பரப்பிய இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர் கைது - போலீசார் அதிரடி !

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள ரெகுநாதபுரம் கிராமம் அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராக இந்து மதத்தை சேர்ந்த நர்க்கீஸ்கான் என்பவர் தேர்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் இஸ்லாமியர் என்று அவதூறு பரப்பப்பட்டது.

பாஜகவினர் இந்த அவதூறை தொடர்ந்து பரப்பிவந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் இது போன்ற அவதூறை வெளியிட்டிருந்தார். ஆனால், "தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள ரெகுநாதபுரம் கிராமம் அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கானின் தந்தை பெயர் தங்கராஜ்.

அவர் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. மிகச் சிக்கலான நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கானின் பெயரை அவருக்கு வைத்துள்ளார்கள்" என கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்தார்.

மேலும், இது குறித்து நர்க்கீஸ்கானும் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருந்தார். அதோடு தன்னை பற்றி அவதூறு பரப்பியது குறித்து அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வதந்தி பரப்பிய விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளர் சரவணகார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Also Read: "திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது" - ஒன்றிய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் !