Politics
100 நாள் வேலைத்திட்டம்: “உங்க கூட்டணி பாஜகவை ரூ.4000 கோடி நிலுவையை கொடுக்க சொல்லுங்கள்” -அமைச்சர் பதிலடி!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், அதிமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அந்த வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, 100 நாள் வேலைத் திட்டம் ஊதியம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ.4000 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும் .ஒன்றிய அரசு விடுவித்தால் உடனடியாக ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று பதிலளித்தார்.
இதுகுறித்து பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பதில் வருமாறு :
100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஊதியம் 100% ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும். அதில் கிட்டத்தட்ட ரூ.4000 கோடி நிலுவையில் உள்ளது. ஒன்றிய அரசு ஊதிய தொகை கொடுத்துவிட்டால் உடனடியாக 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் வழங்கப்படும்.
2025- 2026 -ஆண்டும் மொத்தம் 12 நாட்களுக்குதான் ஒதுக்கி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் வேலை உறுதி நாட்களை மனித சக்தி நாட்களை குறைத்து இருக்கிறது. 100 நாள் வேலைத் திட்டம் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில், ஒன்றிய அரசு நேரடியாக வங்கிகள் ஊதியம் செலுத்துக்கிறது. நீங்கள்தான் (அதிமுக) கூட்டணி வைத்து உள்ளீர்களே, அவர்களிடம் சொல்லி தமிழ்நாட்டுக்கான தொகையை கொடுக்க சொல்லுங்களேன்!
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!