Politics

அமெரிக்க நிதி உதவியுடன் காங்கிரஸ் அரசை கவிழ்த்ததா பாஜக ? - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு !

அமெரிக்க அரசின் USAID திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதிஉதவி செய்யப்பட்டு வந்தது. இந்த அமைப்பின் சார்பில் இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க 181 கோடி நிதி ஒதுக்கியதாகவும், அதை நிறுத்தி வைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய டிரம்ப், இந்தியாவில் வேறுயாரையோ ஆட்சியில் அமர்த்த இந்த நிதியை பைடன் அரசு ஒதுக்கியிருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அரசியல் புயலை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா, USAID அமைப்பால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 181 கோடி நிதி வங்காளதேசத்துக்கானது, இந்தியாவுக்கானது அல்ல என்றும் இந்த விவகாரத்தில் காங்கிரசை குற்றம் சாட்டிய பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

pawan khera

மேலும் USAID மூலம் இந்தியா பெற்ற நிதியுதவி மற்றும் இந்தியாவில் உள்ள பிற அமைப்புகள் பெற்ற நிதியுதவி பற்றிய வெள்ளை அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர், வாஷிங்டனில் பேசப்படும் பொய்களை இந்தியாவில் பாஜக விரிவுபடுத்தி விவாதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டத்தின் கீழ் அன்னா ஹசாரே-அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை தொடங்கி திட்டமிட்டு மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அமெரிக்காவின் USAID நிதி உதவியுடன் கவிழ்த்ததாக குற்றம்சாட்டிய பவன் கேரா, இதற்காக இந்திய மக்களிடம் பா.ஜ.க. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Also Read: சிதம்பரம் நடராஜர் கோவில் : காலகாலமாக இருந்த வந்து நடைமுறை தான் இது : அமைச்சர் சேகர்பாபு !