Politics

"பள்ளி மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்" - அண்ணாமலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் !

மாநில அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 38 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் வடிவமைத்த அறிவியல் சார்ந்த கண்காட்சிகளை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என நாங்கள் கூறுவது பொய் என தொடர்ந்து அண்ணாமலை தெரிவித்து வருகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொய் சொல்வாரா? பள்ளி மாணவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய நாங்கள் இப்படிப்பட்ட தகவலை கூறுவோமா.

ஒன்றிய அரசின் தரவுகளின் அடிப்படையில்தான் நாங்கள் அறிக்கை வெளியிடுகிறோம். ஆனால் அது பொய் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது. நிதி விடுவிக்க வரவில்லை என்றால், ஒன்றிய அரசு பணம் வழங்கவில்லை என்றுதானே சொல்ல முடியும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.

பலமுறை டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை மாநில அரசுக்கும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி நாம் மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கு 2150 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசிடம் பெற்று தரலாமே? . பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக ஆளுநர் அறிக்கை, அண்ணாமலை அறிக்கை என வெளியிட்டு வருகிறார். தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக பட்டியல் உள்ளது நாளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் " என கூறினார்.

Also Read: "திமுகவுக்கு வந்த அதிமுக வாக்குகள்,Pro Incumbencyதான் எங்கும் எதிரொலிக்கிறது"- அமைச்சர் செந்தில் பாலாஜி!