Politics
இடஒதுக்கீடு மறுக்கப்படும் ஒரே துறை நீதித்துறை! : நாடாளுமன்றத்தில் பி.வில்சன் தனிநபர் மசோதா தாக்கல்!
இந்தியாவில் கல்வி, அரசு வேலைவாய்ப்பு என பல துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்பெற்று படிப்படியாக அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
எனினும், இன்றளவும் பெருமளவில் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது தேசிய சிக்கலாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் அரசு முன்னெடுக்கிற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை கண்டிக்கும் துறையாக விளங்கும் நீதித்துறையில் இடஒதுக்கீடு என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.
அதனை சீர்செய்யும் பொருட்டு, தி.மு.க எம்.பி பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றைய தாக்கல் செய்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எனது வாழ்க்கையில் இன்று ஒரு முக்கியமான நாள்.
இந்த சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக எனது தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது , மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் ஒரு முக்கியமான தனிநபர் மசோதாவை நான் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளேன்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.
கொலீஜியம் அமைப்புக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்கவும், கொலீஜியம் பரிந்துரைகளை அறிவிக்க ஒன்றிய அரசுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவும் இந்த மசோதா முயற்சிசெய்கிறது.
சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் செல்லும் தன்மையை நீதிபதிகள் திறம்பட தீர்மானிப்பதால், மாநில மற்றும் நாட்டின் சமூக பன்முகத்தன்மையை நீதிமன்ற அமர்வு பிரதிபலிக்கவேண்டியது கட்டாயமாகும். இது ஒரு ஒரே மாதிரியான சமூக வர்கத்தினருக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது.
அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட ஒரே துறை உயர் நீதித்துறை (உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்) மட்டுமே.
உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!