Politics
மெக்சிகோ, கொலம்பியா நாடுகள் செய்ததை கூட செய்யமுடியாத மோடி அரசு : எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் !
சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவாக வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்து. இதில் 300க்கும் அதிகமான எலெக்டரோல் வாக்குகளை பெற்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்காவில் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்றும், பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்கராக இருந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
தற்போதைய சூழலில் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் வசித்து குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள 10 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது. அதோடு சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை முதற்கட்டமாக அமெரிக்கா இந்தியினாவுக்கு தங்கள் ராணுவ விமானத்தில் திருப்பியனுப்பியது
அப்படி திருப்பியனுப்பிய இந்தியர்கள் கைகால்களில் விலங்கிடப்பட்டு அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து அவர்களை நாடு கடத்த டிரம்ப் உத்தரவிட்டார். இவர்கள் விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த விமானங்களை தரையிறக்க மெக்சிகோ, கொலம்பியா அரசுகள் அனுமதி வழங்கவில்லை.
அதனைத் தொடர்ந்து தங்கள் சொந்த விமானங்களை அனுப்பி அவர்களை பத்திரமாக தங்கள் நாட்டுக்கு மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகள் கொண்டுவந்தன. ஆனால் இந்தியர்களை விலங்கிட்டு அமெரிக்கா அனுப்பியதற்கு நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் வெளியுறவுத் துறையில் மோடி அரசின் தோல்வியையே இது குறிப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!