Politics

"பிரபாகரன் குறித்து சீமான் சொல்வது அனைத்துமே தவறான தகவல்"- அம்பலப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் !

தந்தை பெரியாரை சீமான் விமர்சித்து பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதோடு பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகளுக்கு தொடர்புள்ளவர்கள் சீமானின் பொய்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சீமான் பிரபாகரனோடு இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டியளித்திருந்தார். அதேபோல பிரபாகனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரனும் சீமானின் பொய்களை அம்பலப்படுத்தினார்.

இந்த நிலையில், எல்லாளன் திரைப்படத்திற்காக 7 மாத காலம் விடுதலைப்புலிகளுடன் இருந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சீமானின் பொய் கருத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், "சீமானை சந்திக்கும்வரை பிரபாகரனுக்கு சீமான் யாரென்றே தெரியாது. பிரபாகரன் குறித்து சீமான் சொல்வது அனைத்துமே தவறான தகவல்.

பெரியாரையும், திராவிடத்தையும் தலைவர் பிரபாகரன் என்றுமே தவறாக பேசியதில்லை.சீமான் பிரபாகரனுடன் எடுத்ததாக இணையத்தில் வெளியான புகைப்படங்கள் அனைத்தும் போலியானது. சீமான் துப்பாக்கி பயிற்சி எடுப்பதுபோன்று வெளியான புகைப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது. பயிற்சி களத்துக்கே சீமான் அனுமதிக்கப்படவில்லை"என்ற கூறியுள்ளார்.

Also Read: அமெரிக்க விமானங்கள் தரையிறக்க அனுமதி மறுப்பு... மெக்சிகோ, கொலம்பியா நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை !