Politics

40 ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்ட நச்சுக்கழிவால் தொடரும் அவதி : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நடந்தது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 1984ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நச்சுவாயுக் கசிவு விவகாரத்தின் வடு, 40 ஆண்டுகளுக்கு பிறகு அகற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

போபால் நகரில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவு நேர்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், 337 டன் நச்சுக்கழிவுகள் அங்கேயே படிந்தன.

அதனை, கடந்த 40 ஆண்டுகளில் அதிக காலம் ஆட்சி செய்த பா.ஜ.க கண்டுகொள்ளாமல் மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிசெய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, அக்கழிவை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது ஒன்றிய அரசு.

எனினும், ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை மற்றொரு போராட்டத்திற்கு தான் வழிவகுத்துள்ளது. போபாலில் படிந்திருந்த 337 டன் நச்சுக்கழிவுகளை அகற்றுகிறோம் என்ற பெயரில், அக்கழிவுகளை அந்த மாநிலத்தின் பிதாம்பூரில் எரிக்க திட்டமிட்டது தான் அந்த ஒன்றிய அரசின் நடவடிக்கை.

“நச்சுக்கழிவுகளை நாட்டில் இருந்து வெளியேற்றாமல், அதே மாநிலத்தில் எரிக்க முற்படுவது மக்களுக்கு எவ்வகையிலும் நன்மை தராது. கூடுதல் சிக்கல்களை தான் விளைவிக்கும்” என்பது தான் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளாக அமைந்துள்ளன.

பிதாம்பூர் தொழிற்பட்டறையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது என்ற போதிலும், ஒன்றிய பா.ஜ.க அரசும், மாநில பா.ஜ.க அரசும் அதனை பொருட்படுத்தாதது கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.

Also Read: ”இந்தியாவை தாங்கி பிடிக்கும் மாநிலம் தமிழ்நாடு” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!