தமிழ்நாடு

”இந்தியாவை தாங்கி பிடிக்கும் மாநிலம் தமிழ்நாடு” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!

இந்தியாவை தாங்கி பிடிக்க கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழுந்து வருகிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

”இந்தியாவை தாங்கி பிடிக்கும் மாநிலம் தமிழ்நாடு” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 14-வது உலகத்தமிழ் தொழிலதிபர்கள் - திறனாளர்கள் மாநாட்டினை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்தான் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கு விடுதலை பிறந்து உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அயலகத் தமிழர் நலவாரியத்தை அமைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டை நாம் வளர்த்து எடுத்து வருகிறோம். இந்தியாவை தாங்கி பிடிக்க கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழுந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது பல்லாயிரம் தொழிற்சாலைகள் இங்கு செயல்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசே, தொழில் துறையில் நம்பர் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என பாராட்டியுள்ளது. 35% ஆட்டோ மொபைல், 35% எலக்ட்ரானிக், 40% மின்சார வாகனம், 70% இருசக்கர வாகனம் உற்பத்தி தமிழ்நாட்டில் நடக்கிறது. 100 ஆண்டுகளாக படி படி என்று சொன்னதால் தான் தமிழ்நாடு இந்த நிலைமைக்கு வந்து உள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories