Politics
"பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் படுபாதாளத்திற்கு போய் விட்டது" - திருச்சி சிவா MP விமர்சனம் !
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா எம்.பி, சென்னை திரும்பினார். தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒன்றிய அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்வதாக நினைத்து கொண்டு அம்பேத்கார் பெயரை உச்சரிப்பதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்து இருந்தால் புண்ணியம் கிடைக்கும் என்றார். அரசியல் சட்ட மேதையும் அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தியவருமான அம்பேத்கர் பெயரை சொன்னால் எந்த பயனும் இல்லை என்று அவர் சொன்னரை யாராலும் ஏற்க முடியாது. இதனை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் போராட்டம் நடந்தது. ஆளும் கட்சி போராட்டம் நடத்த வேண்டும் என்றால் சற்று தள்ளி நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எங்களுக்கு எதிரே இருந்து முழக்கங்கள் எதிர் எதிராக வந்த போது பிரச்சனைகள் எழுகிறது.
பா.ஜ.கவினர் ராகுல்காந்தி தள்ளி விட்டார் என கூறுகின்றனர். ராகுல்காந்தி தன்னை தள்ளி விட்டார்கள் என கூறுகிறார். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் தடுமாறினார். ஆனால் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. குற்றச்சாட்டிற்கு மட்டும் அனுமதித்தனர். எதிர்காலத்தில் இது மட்டும்தான் நடந்ததாக குறிப்பில் வரும். மற்றொரு அவையில் இருப்பவர் பற்றி வேறு ஒரு அவையில் பேசக்கூடாது. அவரால் அங்கு வந்து விளக்கம் சொல்ல முடியாதுஆனால் இரு அவையிலும் ராகுல்காந்தியை பற்றி குறை சொல்லி கொண்டே இருந்தார்கள். இது இருதரப்பு வாதம், இது பற்றி ஆழமாக ஆராய்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ஒழுங்கு பிரச்சனை எழுப்பி சொன்னேன்.
கையில் அதிகாரம் இருப்பதால் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். ஆனால் ராகுல்காந்தி, கார்கே தந்த புகார்களை பரிசிலிப்பதாக காவல்துறை கூறுவதே பராபட்சமானது. இருவர் தந்த புகார்கள் மீதும் வழக்கு தொடர்ந்து இருந்தால் நியாயமானது. ஒருவர் தந்த புகாரில் 5 பிரிவுகளில் வழக்கும், மற்றொருவர் தந்த புகாரில் பரிசீலிக்கிறோம் என்பது நகைப்புக்குரியது.
பாராளுமன்றத்தில் அமளி, கலவரம் நடப்பது போல் தெரியும். ஆனால் உண்மையில் நாடாளுமன்றத்தில் உள்ள தொலைக்காட்சியில் ஆளும்கட்சிக்கு சாதகமானதை மட்டுமே காட்டுவார்கள். என்ன நடந்தாலும் அப்படியே நேரலையில் கொண்டு செல்லுங்கள், மக்கள் முடிவு எடுப்பார்கள். எதிர்கட்சி தலைவர்கள் யார் பேசினாலும் ஒரு நிமிடத்திற்கு மேல் ஒலிபெருக்கி இணைப்பு தருவதில்லை. இது போன்ற அவலங்களை சந்தித்து கொண்டு ஜன நாயகத்தை நிலை நிறுத்தவும் நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்காக போராடுகிறோம். பெரும்பான்மை இருக்கிறது என்பதால் எல்லை மீறி போகிறார்கள். நாடாளுமன்ற ஜன நாயகம் படுபாதாளத்திற்கு போய் விட்டது. அமித்ஷா சொன்னதுபோல நாடாளுமன்றத்தில் உரையை AI மூலம் மாற்ற முடியாது. நாடாளுமன்ற தொலைக்காட்சி எடுப்பது தான் ஆதாரம். அவை குறிப்பில் பேச்சும், வார்த்தையும் இருக்கும். அதை யாரும் மாற்ற முடியாது.
நாடாளுமன்றத்தில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதனை திமுக கடுமையாக எதிர்த்தது. பல்வேறு தரப்பினர் வாழும் இந்தியா பண்முகத்தன்மை கொண்டது. மொழியால், மாநிலங்களால் பண்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. இது போன்ற பல்வேறு காரணங்களால் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமில்லை என முதலமைச்சர் சொல்லி உள்ளார். எல்லாரும் சொன்னதால் பிரதமரும் கூட்டு குழுவிற்கு ஒப்பு கொண்டதாக கூறினார்கள். கூட்டு குழுவில் திமுக சார்பில் செல்வகணபதி, வில்சன் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த குழு அறிக்கையை தரும். அந்த அறிக்கையில் உடன்பாடு இல்லை என்றால் எதிர்கருத்தையும் பதிவு செய்வோம்"என்று கூறினார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!