Politics
“வாக்களிக்க சென்றால் துப்பாக்கியால் சுடுவோம்” - இஸ்லாமியர்களை மிரட்டிய உ.பி போலிசார்... வீடியோ வெளியீடு !
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
மேலும், சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு திட்டங்களும் அறிவிப்புகளும் வெளிவந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் கடைகளின் முன்னர் உரிமையாளர்களின் பெயர்களை எழுத வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் வாக்களிக்க சென்ற இஸ்லாமியர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் சில சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு இஸ்லாமியர்கள் சென்றபோது அவர்களை தடுத்து நிறுத்திய போலிஸார் "இஸ்லாமியர்கள் தேர்தலில் வாக்களிக்க சென்றால் அவர்களை துப்பாக்கியால் சுடுவோம்" என்று மிரட்டியுள்ளனர்.
இது குறித்த வீடியோ காட்சிகள் சமாஜ்வாதி கட்சியின் அதிகாரபூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் சில தொகுதிகளில் இஸ்லாமியர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் உள்ள நிலையில், அங்கு பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறவைக்கும் நோக்கில் போலிசார் இவ்வாறு செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!