Politics
தோல்வி பயம்... மீண்டும் மதவாதத்தை கையிலெடுத்த பாஜக : மகாராஷ்டிராவில் தொடரும் சர்ச்சை பேச்சுகள் !
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுள் முடிவடையும் நிலையில், வரும் நவம்பர் 20-ம் தேதி அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரே அணியாக போட்டியிடவுள்ளது.
அதே நேரம் பாஜக, சிவசேனாவில் இருந்து பிரிந்த ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்த அஜித் பவார் பிரிவு ஆகியவை ஒரே அணியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. எனினும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும், சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணி தோல்வியைத் தழுவியதால் பாஜக மூத்த தலைவர்கள் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என தற்போது மதவாத கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “ மகாராஷ்டிராவில் நடக்கும் வோட் ஜிகாத்தை தர்ம யுத்தத்தின் மூலம் எதிர்கொண்டு வெல்லவேண்டும். கடந்த தேர்தல்களில் சிறுபான்மை வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு விழுந்தது.
இப்போது நாம் விழித்துக்கொண்டு இந்துக்கள் ஒரே அணியாக திரள வேண்டும். மகாராஷ்டிராவில் 14 மக்களவைத் தொகுதியில் வோட் ஜிகாத் தாக்கம் இருக்கிறது” என்று கூறினார். அதே போல அமித்ஷா, மோடி போன்ற பாஜக தலைவர்களும் ”மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருவோம், நாம் ஒரே அணியாக இருக்க வேண்டும்” என்ற கருத்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
உங்களிடம் நான் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு இதுதான் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
பா.ஜ.க-வின் கொட்டத்தை அடக்கிய பஞ்சாப் : சண்டிகர் திட்டத்தில் இருந்து பின் வாங்கிய ஒன்றிய அரசு - முரசொலி!
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !