Politics
ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை முழு அடைப்பு போராட்டம் : மணிப்பூரில் மூடப்பட்ட கடைகள் !
மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்தது. இந்த வன்முறையில் நூற்றுக்கணக்கானொர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை.
இந்த வன்முறை இடையில் சற்று ஓய்ந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் பெரிய அளவில் வன்முறை உருவானது. இது இந்திய அளவில் அதிர்ச்சி அளித்தது. எனினும் மாநில, ஒன்றிய பாஜக அரசுகள் சார்பில் வன்முறையை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், மணிப்பூரில் ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ள நிலையில், இதனை தடுக்க தவறிய ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணிப்பூரின் 13 அமைப்புகள் சார்பில் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!