Politics
ஜம்மு காஷ்மீர் ஆட்சியை பிடிக்கிறது இந்தியா கூட்டணி : பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை !
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கு நடந்த ஆட்சியை பாஜக கவிழ்த்த நிலையில், ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. இதனை சாதகமாக வைத்து காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் தனியே பிரிக்கப்பட்டது.
அதோடு ஜம்மு காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டமும் பறிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறாத நிலை நிலவி வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அங்கு அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி ஜம்மு காஷ்மீரிலுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, சிபிஎம் ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணி சார்பில் ஒரே அணியாக போட்டியிட்டன.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வரை பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை விட அதிக இடங்களில் இந்தியா கூட்டணி முன்னணி வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.
தேசிய மாநாட்டு கட்சி தனித்து 43 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. அதே நேரம் பாஜக 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் மெகபூவா முக்தி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மக்கள் சனநாயக கட்சி 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!