Politics
”எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் டெங்கு உயிரிழப்பு அதிகமாக இருந்தது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
கோவை சிங்காநல்லூரில் 1.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்புற சமுதாய நல கட்டிடம்,மற்றும் காணொளி வாயிலாக தாளியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 58.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் உள்ளிட்டவையினை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போது புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்கனவே இருக்கின்ற மருத்துவர்கள் செவிலியர்கள் போதுமானதாக உள்ளது.
இதுவரை 946 மருந்தாளர்கள் 500-க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டுள்ளது.அதேபோல 2000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்பட உள்ளது.செவிலியர்கள் மருத்துவர்கள் நிரப்பும் பணி தொடர்பாக நீதிமன்றத்தில் 38 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் நேற்றைய தினம் நீதிமன்ற தீர்ப்பின்படி 14 மருத்துவமனையில் கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்களை அழைத்து பேசும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் 1500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒப்பந்த பணியில் பணி செய்யக்கூடிய செவிலியர்களை நிரந்தர செய்ய முடியாது அதற்கு எம்ஆர்பி தேர்வு எழுதுவார்கள் அவர்களை மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படும் .
நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் உள்ளதா என மருத்துவ நடப்பாடும் வாகன மூலம் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலைப்பொழிவு அதிகமானால் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம் போடப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது எங்கும் டெங்கு பாதிப்பு இல்லை. 2017 இல் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் உயிரிழந்தனர். இந்த வருடத்தில் டெங்கு இறப்பு என்பது ஆறு பேர் தான். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்குவால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது டெங்கு பாதிப்பு எங்கு உள்ளது என எடப்பாடி பழனிசாமி காண்பிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
Also Read
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே
-
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல்? : சபாநாயகர் அப்பாவு சொன்ன தகவல்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக துணை போகும் அதிமுக : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்!
-
“ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கிய மோடி..” : பிரதமரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!