Politics
உண்மைக்கு கிடைத்த வெற்றி - சர்வாதிகாரத்துக்கான வீழ்ச்சி : செந்தில் பாலாஜி பிணை குறித்து செல்வப்பெருந்தகை!
தமிழ்நாட்டில் உள்ள ஆளும் கட்சி தலைவர்களை சிறைப்படுத்தி, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்றுவிடலாம் என்ற பா.ஜ.க.வின் எண்ணம், தி.மு.க தலைமையிலான கூட்டணி சாதித்த 40க்கு 40 வெற்றியால் சிதைந்து போனது.
அவ்வாறு, ஒன்றிய பா.ஜ.க முன்னெடுத்த குறுக்கு வழியில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட செந்தில் பாலாஜிக்கு, பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பொய்யான குற்றச்சாட்டுகள், வழக்குகள் மூலம் உண்மையை அதிக நாட்கள் சிறையில் அடைக்க முடியாது பிரதமர் மோடி அவர்களே! ஆட்சியில் உள்ளவர்களின் பழிவாங்கும் போக்கையும், சர்வாதிகாரத்தையும் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை ஆதாரமில்லாமல் முன்னாள் அமைச்சர் திரு செந்தில்பாலாஜி அவர்களை வேண்டுமென்றே சிறையில் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியாக நம்பியதால் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முடிவு உண்மைக்கு கிடைத்த வெற்றி; சர்வாதிகாரத்துக்கான வீழ்ச்சி. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையின் மீது வைத்திருந்த நம்பிக்கையாலும், கட்சியின் மீது கொண்டுள்ள ஆழமான பிடிப்பாலும் எவ்வளவோ மிரட்டியும் அமலாக்கத்துறையால் அவரை வென்றெடுக்க முடியவில்லை.
நீதியின் மீது நம்பிக்கை வைத்து போராடிய முன்னாள் அமைச்சர் திரு.செந்தில்பாலாஜி அவர்களின் மனஉறுதியை பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!