Politics
“புதிய குற்றவியல் சட்டங்களை நீக்க வேண்டும்!” : தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பேட்டி!
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நடக்கிற நாடாக அடையாளப்படும் இந்தியாவில், எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் இயற்றப்பட்டுள்ள, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞரும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான பி. வில்சன் அளித்த பேட்டியில், “மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரெட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன் விசாரணை தலைமை நீதி அரசர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. எங்களுடைய வாதங்களை ஏற்றுக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த மூன்று சட்டம் எப்படி இயற்ற பட்டது என்று எல்லாருக்கும் தெரியும் வாயில் கூட நுழைய முடியாத அளவிற்கு இந்த சட்டத்தின் பெயர் உள்ளது. அந்த சட்டம் சட்டப்படி ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும்.
ஆனால், சமஸ்கிருத மொழியில் உள்ளது. இதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது ஆகவே சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தற்போது இயற்றப்பட்ட இந்த மூன்று குற்றவியல் சட்டங்களை ரத்து செய்து இதற்கு முன்பாக இருந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை இந்த வழக்கின் முக்கிய சாராம்சமாகும். இது தொடர்பாக நோட்டீஸ் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று சட்டங்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!