Politics
பிரதமரும், உள்துறை அமைச்சரும் மிகவும் ஆபத்தானவர்கள்! : பிரியங்கா காந்தி கண்டனம்!
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கருத்தியலை பின்பற்றுகிறவர்களுக்கு, கடவுள் மீதும் பயமில்லை, எவர் மீதும் பயமில்லை என்பது பா.ஜ.க ஆட்சியில் தெளிவடைந்துள்ளது.
கடவுள்களை தாழ்த்தி, மோடியை கடவுளாக்கும் பா.ஜ.க.வினர் தான், 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவருக்கே கொலை மிரட்டல் விடுபவர்களாகவும் இருக்கின்றனர்.
அவ்வகையில், கடந்த வாரம் டெல்லி பா.ஜ.க.வின் மூத்த தலைவர் தர்வீந்தர் சிங் என்பவர், பொது மேடையில், “ராகுல் காந்தியின் மூதாட்டிக்கு (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) நடந்தது தான், ராகுல் காந்திக்கும் நடக்கும்” என மிரட்டல் விடுத்த சம்பவம் அமைந்துள்ளது.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது போல, ராகுல் காந்தியும் கொல்லப்படுவார் என பா.ஜ.க மூத்த தலைவர் பொதுமேடையில் பேசுவதற்கு, பா.ஜ.க தலைமை அனுமதிப்பதோடு நிறுத்தாமல், அதனை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்படுவது, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் ஏழை மக்களுக்காக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான வன்முறை கருத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க.வினர் விடுக்கிற மிரட்டல்கள், அக்கட்சி எவ்வளவு ஆபத்தானது என்பதையும், இந்த ஆபத்தான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க தலைமை பொறுப்பாளர்கள், கட்சியை விட மிகவும் ஆபத்தானவர்கள் என்பதையும் உணர்த்துகிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !