Politics
"காங்கிரஸ் அறிவிக்கும் முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க தயார்"- உத்தவ் தாக்கரே அறிவிப்பு !
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்ததில், அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் 8 பேருக்கு உடனடியாக ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து மஹாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுட்டள்ளது.
மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் , காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, "கூட்டணிக்கான தல்வர் வேட்பாளரை முதலில் தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் அறிவிக்கும் எந்த வேட்பாளரையும் நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம்"என்று அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவுடனான கூட்டணிக்கு பிறகு அதிக எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கையில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது. பல தேர்தல்களில் பாஜக கூட்டணி காட்சிகளை மேலே வரவிடாமல் தடுத்ததைப் பார்த்திருக்கிறேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்