Politics
மக்கள் விரோத ஆளுநர் : சுதந்திர தின விழாவின்போது தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக & கூட்டணி கட்சிகள் !
இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் இழுத்தடித்து அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.
இப்படி மசோதாக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு இடைஞ்சல்களை ஆளுநர் மாநில அரசுகளுக்கு கொடுத்து வருகிறார். மேலும் தமிழ்நாடு ஆளுநர், ஆளுநர் வேலையை தவிர்த்து பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. அதுமட்டுமின்றி பல்கலை விவகாரம், திருவள்ளுவருக்கு காவி அணிவித்து புகைப்படம் வெளியிட்ட விவகாரம் என தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
இப்படி தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் ஆளுநருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கண்டனங்கள் எழுப்பி வந்தாலும், ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை. இந்த சூழலில் நாளை (சுதந்திர தினம்) ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை திமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவின்போது அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து வைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை, திமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே விசிக, சிபிஐ, சிபிஐ (எம்), காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்த நிலையில், தற்போது திமுகவும் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசு தின விழாவின் தேநீர் விருந்தையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தனர். தமிழ்நாடு, திராவிட கொள்கைக்கு எதிராக செய்லபடும் ஆளுநரை கண்டித்து, தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், அதிமுக தேநீர் விருந்துக்கு செல்வதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!