Politics
பாஜகவுக்கு நன்கொடை அளிக்காத தொழிலதிபர்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள் - மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு !
பாஜக ஆளாத மாநிலங்களை தவிர, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாஜக குறிவைத்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதாவது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளை ஏவி, எதிர்க்கட்சிகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. அந்த வகையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரித்து வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை பாஜக குறிவைத்தது.
அதன்படி டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை இந்த வழக்கு குறித்து விசாரிக்க ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், கடந்த 2023 பிப்.26-ல் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இதுகுறித்து மேல்முறையீடு ஜாமீன் கேட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றமும் ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்த சூழலில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி (ஆக.09) உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மணீஷ் சிசோடியா திஹார் சிறையில் இருந்து விடுதலையானார். சுமார் 17 மாதம் (1.5 ஆண்டுகள்) கழித்து சிறையில் இருந்து விடுதலையான மணீஷ் சிசோடியாவுக்கு தொண்டர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து அவர் நேற்று ஆம் ஆத்மி கட்சித் தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அரசியலமைப்பை விட பாஜக சக்திவாய்ந்தது அல்ல. எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையிலடைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் குடிமக்களையும் துன்புறுத்தும் இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராக ஒவ்வொரு நபரும் போராட வேண்டும். பாஜகவுக்கு நன்கொடை அளிக்காததால் போலி வழக்குகளில் தொழிலதிபர்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள்"என்று கூறினார்.
மேலும், பாஜகவின் சர்வாதிகாரத்தை மிதிக்கும் வகையில்தான், அரசியலமைப்பின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியிருக்கிறது. எட்டு மாதங்களுக்குள் நீதி கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால், அதற்கு 17 மாதங்கள் ஆகிவிட்டது என்றாலும் இறுதியில் உண்மை வென்றிருக்கிறது. எனவே, சர்வாதிகாரத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், கெஜ்ரிவால் வெறும் 24 மணி நேரத்தில் சிறையிலிருந்து வெளியே வருவார்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!