Politics
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்ற வைத்த நெருப்பு: மோடி கூட்டத்தை புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி முதல்வர்கள்!
2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் மைனாரிட்டி பாஜக ஆட்சியை தக்கவைக்க உதவிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே கூடுதல் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களின் சிறப்பு திட்டங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பிற மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அதிலும் தமிழ்நாட்டின் பெயர் கூட பட்ஜெட்டில் இல்லாத நிலையில், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குவதாக அறிவித்த நிதியை விடுவிப்பதாக கூட எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
இதன் காரணமாக ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் வரும் 27-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது இந்திய அளவில் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்தது. அந்த வகையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சுகு ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதை உறுதி செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராய் விஜயன், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் ஆகியோருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனிடையே நேற்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜீயும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். இது ஒன்றிய அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதே நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்து நெருப்பு இந்தியா முழுவதும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!