Politics
அம்பானியின் அடிமை - NDA! : மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு!
அம்பானி வீட்டு விழா என்றால், பல ஆண்டுகளாக தீராத கோரிக்கைகளும், ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் என்பது அண்மை நிகழ்வுகள் வழி அம்பலப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தராகவும், பா.ஜ.க கட்சியின் பெரும் பொருளாதார நன்கொடையாளராகவும் விளங்கும் முகேஷ் அம்பானி, தனது கடைசி மகன் ஆனந்த் அம்பானியின், முன் திருமண (Pre Wedding) நிகழ்ச்சிகளால், நாட்டையே திரும்பி பார்க்க வைத்து வருகிறார்.
அவ்வகையில், இந்தியாவின் பல இடங்களில் தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையங்கள் அமைவதே கடும் சிரமமாக இருக்கும் சூழலில், இந்தியாவின் பல பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் கொண்டுவரவே, ஒன்றிய பா.ஜ.க அரசு பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் வேளையில் கடந்த மார்ச் மாதம், முகேஷ் அம்பானி மகன் ‘முன் திருமண’ விழாவிற்காக, குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் உள்நாட்டு விமான நிலையத்தை, 10 நாட்கள் பன்னாட்டு விமான நிலையமாக்கியது ஒன்றிய பா.ஜ.க அரசு.
குறிப்பாக, இந்த விமான நிலையம், இந்திய விமானப் படையின் கீழ் இயங்கும் நிலையம் என்பது, கூடுதல் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்தது. காரணம், இராணுவ பகுதியில் மாற்றம் ஏற்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. சொல்லப்போனால், இயலாத செயலே ஆகிய கண்டனங்கள் தேசிய அளவில் அப்போது எழுந்தன.
இந்நிலையில், 4 மாதங்களுக்கு பின், அதே மணமக்களுக்கான, மற்றொரு ‘முன் திருமண’ நிகழ்விற்காக, இந்தியாவின் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாகவும், வணிக நகரமுமாக அறியப்படும் மும்பை மாநகரில் போக்குவரத்து நெறிமுறைகளையே மாற்றியமைத்துள்ளது NDA (பா.ஜ.க கூட்டணி) அரசு. இதனால், மக்களும் கடும் கால நெருக்கடிக்குள்ளாகினர்.
இது குறித்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “அம்பானி வீட்டு திருமணத்திற்காக, போக்குவரத்து நெறிமுறைகளில் மாற்றம் செய்திருப்பது வெட்கப்பட வேண்டிய செய்தி. எனினும், இது அம்பானி அடிமைகளாக இருக்கும் NDAவிடம் எதிர்ப்பார்த்ததே” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்தியாவின் பல இடங்களில், கட்டுமான குளறுபடிகளால், எண்ணற்ற பாலங்களும், சாலைகளும் சிதைவுக்குள்ளாகி மக்கள் அவதிப்படும் வேளையில், முதலாளிகளின் சொகுசுக்காக, மேலும் மக்களை அலைக்கழிப்பதற்கு, கண்டனங்கள் எழத்தொடங்கியுள்ளன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!